Saturday, November 22, 2008

உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமாவா?

வீட்டில் சுற்றித் திரியும் எலிகள், கரப்பான் பூச்சிகளால் பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படும் ஆபத்து இருப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இது தொடர்பான ஆய்வு ஒன்றை கொலம்பியாவில் உள்ள குழந்தைகள் சுற்றுப்புறச் சூழல் சுகாதார மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

இதில், வீசிங் எனப்படும் மூச்சுத் திணறல், காய்ச்சல், எக்ஸிமா எனப்படும் ஒவ்வாமை போன்றவை 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஏற்பட, கரப்பான் பூச்சிகளும், எலிகளும் தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அவற்றின் மூலம் வெளிப்படும் ஒருவகை புரோட்டீன் இத்தகைய நோய்கள் பரவக் காரணமாக அமைவதாக, ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

வீட்டிற்குள் உருவாகும் ஒவ்வாமையில் கரப்பான் பூச்சிகளும், எலிகளும் முக்கியப் பங்கு வகிப்பது தங்கள் ஆய்வில் புலப்பட்டதாக, அந்த ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

நன்றி:webdunia

1 comment:

நட்புடன் ஜமால் said...

தமிழ் படுத்தியாச்சா

மீண்டும் எழுதலையா